குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மகளிருக்கான இலவச பேருந்தில் ஏறுவதற்காக காத்திருந்த பெண்களை ஏற்றாமல் சென்ற ஓட்டுநரை, இளைஞர்கள் சிலர் வழிமறித்து எச்சரித்த வீடியோ வெளியாகியுள்ளது.கூட்டப்புளியில் இருந்து நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் சென்ற மகளிருக்கான இலவச பேருந்தில் ஏறுவதற்காக, அழகப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் இருவர் காத்திருந்தனர்.அவர்களை கை காட்டியும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.இதனை கவனித்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், காரில் பின் தொடர்ந்து சென்று அரசு பேருந்தை வழிமறித்ததோடு, எதற்காக நிறுத்தாமல் சென்றீர்கள் என கேள்வி எழுப்பினர்.