ஈரோட்டில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட அரியலூரை சேர்ந்த இளம்பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். வஉசி நகரை சேர்ந்த முருகன் - சரஸ்வதி தம்பதியின் மகள் மஞ்சு, இன்ஜினியரிங் படித்த நிலையில், குரூப் 2 தேர்வு பயிற்சிக்காக ஈரோட்டிற்கு சென்றபோது சாலையை கடந்த அவர் விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்த அவரது இதயம், கண், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக பெறப்பட்டது.இதையும் படியுங்கள் : மயக்கம் வந்த போதும் பேருந்தை சாலை ஓரம் நிறுத்திய ஓட்டுநர்... அரசு பேருந்து ஓட்டுநரின் சமயோஜிதத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு