செங்கல்பட்டில் இடத்தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருக்கழுக்குன்றம் அருகே கொத்தமங்கலத்தில் வசித்து வந்த பசுபதியின் மனைவி வசந்தா என்பவருக்கும் பசுபதியின் தம்பி மனைவி சிவகாமி மற்றும் அவரது பெரியம்மாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 7 ஆம் தேதி வீட்டிற்கும் செல்லும் பாதை தொடர்பாக வசந்தாவிற்கும் மணிகண்டன் என்பவருக்கு தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வசந்தா தீக்குளித்தார்.