மதுரையில் பறக்கும் பாலத்தில் பெண் ஒருவர் அதிவேகத்தில் ஸ்கூட்டியை ஓட்டி ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வைகை ஆற்றங்கரை சாலை மற்றும் பறக்கும் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பெண் ஒருவர் பறக்கும் சாலையில் அதிவேகத்தில் ஸ்கூட்டியை ஓட்டி ரீல்ஸ் எடுத்த நிலையில், வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.