பெரம்பலூரில் குப்பையில் கிடந்த தங்கச்செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். குப்பைகளை தரம்பிரித்த தூய்மை பணியாளர்கள் அதிலிருந்த செயினை மீட்டு காவலர்கள் முன்னிலையில் செயினை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனர்.