மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமே ஐ.ஏ.எஸ் அதிகாரி என பொய் கூறி ஏமாற்ற முயன்ற பெண் வசமாக சிக்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பெண் ஒருவர், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு புகார் ஒன்றை கொடுத்ததாக தெரிகிறது.ஆனால் விசாரணையில், அவர் பொய் கூறியது தெரியவந்தது.