திருவள்ளூர் அருகே 11 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த பெண்ணிற்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அதனை சரி செய்துள்ளனர். கடம்பத்தூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஷர்புனா. இவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் சரியாகவில்லை. இதனை அறிந்த கடம்பத்தூர் ஒன்றிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உதவியுள்ளனர்.