விபத்தில் சிக்கிய தனது கணவரை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த பெண் ஒருவர், சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.கடந்த புதன்கிழமை தலைமை மருத்துவ அதிகாரியான ஹரிபிரியா என்பவர் திடீர் விடுப்பு எடுத்ததால், அன்று முழுவதும் செவிலியர்களே சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து ஹரிபிரியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது தனது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் முன்னறிவிப்பு இல்லாமலும், முன்னேற்பாடு செய்யாமலும் சென்று விட்டதாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.