சென்னை விருகம்பாக்கத்தில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கணவனை கொள்ளை அடிக்க அனுப்பிய மனைவி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 7-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் வசித்து வரும் சங்கர்-ஹேமாவதி தம்பதியின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், விருகம்பாக்கத்தை சேர்ந்த திவாகரை கைது செய்தனர். மேலும் தம் மனைவி தான் தன்னை கொள்ளையடிக்க அனுப்பியதாக வாக்குமூலம் அளித்தார். இதனால் அவரது மனைவி நித்திய ரூபி மற்றும் நகைகளை விற்பனை செய்ய உதவிய ராதிகா ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 50 சவரன் நகைகளில் 32 சவரன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டது.