அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு கொடுமைப்படுத்திய கணவனின் பிறப்புறுப்பை கத்தியால் அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனந்தவாடி பகுதியைச் சேர்ந்த சின்னப்பா, வழக்கம்போல மதுபோதையில் தமது மனைவி மற்றும் மகளுடன் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கை, கால்களின் நரம்புகள் அறுக்கப்பட்டதோடு பிறப்புறுப்பும் அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சின்னப்பா இறந்து கிடந்தார். விசாரணையில் கணவர் தினமும் மதுபோதையில் கொடுமைப்படுத்தியதால் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் அறுத்து கொலை செய்ததாக, மனைவி பச்சையம்மாள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.