ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் பல அடி உயரத்திற்கு மலைபோல் நுரை பொங்கி எழுவதால் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பெங்களூரு நகரின் கழிவுநீர் மற்றும் ஆற்றாங்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் இதுபோன்று ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.