வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மகளை கடத்தியதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததாகக் கூறி, காவல் நிலையம் முன்பு தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. ரங்கம்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகாந்த் மகள் ஆகிலா, ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது 4 பேர் அவரை கடத்திச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.