தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், காப்புக்கட்டி, விரதமிருந்து மேள,தாளத்துடன் ஊர்வலமாக, பால்குடம் சுமந்து வந்தனர். தொடர்ந்து, தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பெண்கள், கும்மியடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.500க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பால்குடம் சுமந்து வந்தும், கும்மியடித்தும் வழிபட்டனர். மானாமதுரை சுற்று வட்டாரத்திலுள்ள விளாக்குளம், கீழ்மேல்குடி, கிளாங்காட்டூர் கிராம மக்கள், விரதமிருந்து காப்புக்கட்டி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கிராம பெண்கள் கும்மியடித்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.