கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கரகானப்பள்ளி கிராமத்தில் தென்பட்ட 15 அடி நீள மலைப்பாம்பை, பொதுமக்கள் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிகள், திடீரென கால்நடைகள் மிரண்டு ஓடியதால் அருகில் சென்று பார்த்த போது மலைப்பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வனத் துறையினருக்கு தகவல் அளித்தும் நீண்ட நேரமாக வராததால், கிராம மக்களே சேர்ந்து லாவகமாக மலைப்பாம்பை பிடித்து மேலுமலை அடர் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.