மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ரூரல் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க குவிந்தனர். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை உடன் தங்கள் ஊராட்சியை இணைத்தால் நிதி நெருக்கடி ஏற்படுவதோடு பலருக்கு வேலையிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.