சிவகாசி பகுதிகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் தங்க வேண்டும் என, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கி பணி செய்யும் இடத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.