காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் பலியான வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, அரசு பேருந்து மோதி உயிரிழந்ததால், அவரது வாரிசுதாரர்களுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை ஏழரை சதவீத வட்டியுடன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், 1 லட்சத்து 25 ஆயிரம் பாக்கி இருந்ததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.