நாமக்கல் அருகே மகளிர் சுய உதவிக் குழு மூலம் வங்கியில் வாங்கிய 4 லட்சத்து 62 ரூபாய் பணத்தை திருப்பி செலுத்தாமல் 3 பேர் ஏமாற்றியதால் வங்கி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் பணத்தை ஏமாற்றிய திலகம், பிரியதர்சினி மற்றும் ரேவதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.