கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விநாயகர் ஊர்வல பாதுகாப்பிற்காக சென்ற காவல் ஆய்வாளரின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் விஜி என்பவர் காரில் திருக்கோவிலூர் சென்று கொண்டிருந்தார்.ஆஜிஸ் நகர் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த சிவா என்பவரின் கார் அதிவேகமாக மோதியது.இதில் காவல் ஆய்வாளர் விஜி கார் கவிழ்ந்த விபத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் சிறுகாயங்களுடன் தப்பினர்.