கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வானவ கோடீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வளையமாதேவி கிராமத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை வானவ கோடீஸ்வரர் கோயில் கலசத்திற்கு யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமை ஆதின 27ஆவது குருமகா சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ஜப்பானில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.