தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சென்று கொண்டிருந்த வேன், தடுப்பு சுவரில் மோதி, முன்னால் சென்ற கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு வாகனங்களில் சென்றவர்களும் உயிர் தப்பினர். தருமபுரி மாவட்டம் மொம்மிடி கிராமத்தை சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி சென்று விட்டு தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி கொண்டிருந்த போது, முனையப்பட்டி என்ற இடத்தில் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது ஏறியது. தொடர்ந்து எதிரே வந்த வந்த கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.