திண்டிவனத்தில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை விபத்தில் உயிரிழந்த சிவக்குமார் என்பவரின் குடும்பத்திற்கு, வட்டியுடன் 8 புள்ளி 07 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக இன்சூரன்ஸ் நிறுவனம் உறுதியளித்ததால் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.இதையும் படியுங்கள் : கத்தியை காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ.51,500 பணம் பறிப்பு