ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இரு சக்கர பேட்டரி வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. பூட்டுத்தாக்கு அம்முண்டி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ரித்திக் குமார் என்பவர், தனது ரெஸ்டாரென்ட்டில் இருந்து வீட்டிற்கு சென்றபோது திடீரென வாகனத்தின் அடிப்பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாகனத்தை விட்டு அவசரமாக கீழே இறங்கினார். இதனையடுத்து சற்று நேரத்தில் வாகனம் மளமளவென தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது.