கோவை மாவட்டம் அன்னூரில் மின் கம்பி மீது உரசி, வைக்கோல் லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டு மக்கள் தெரிவித்ததும், லாரி ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினர். இதனையடுத்து விரைந்து தீயை அணைத்ததால், பாதி வைக்கோலும் லாரியும் தீயில் இருந்து தப்பின.