திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பல்கர் லாரி சாலையில் கவிழ்ந்து எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியது. இதில் நல்வாய்ப்பாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அரியலூரில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் லோடு ஏற்றி சென்ற பல்கர் லாரி நாகலாபுரம் பகுதியில் கவிழ்ந்தது.