செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சாலையில் நின்று கொண்டிருந்த தர்பூசணி லாரி கவிழ்ந்து தர்பூசணி பழங்கள் உருண்டோடின. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.