கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைய சில துரோகிகளே காரணம் என்றும், அவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அத்தாணியில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் பேசினார்.