திருப்பூர் மாவட்டம் போயம்பாளையத்தில் மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க சென்ற நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கிழக்கு பொம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த பஞ்சு மில் ஆப்ரேட்டரான ரமேஷ்குமார் என்பவர் போயம்பாளையத்தில் உள்ள மெடிக்கலுக்கு மாத்திரை வாங்க சென்றார். அப்போது, மெடிக்கல் வாசலிலேயே திடீரென மயங்கி விழுந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.