கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருமண மண்டபத்தில் மணமகனின் தந்தை திடீரென உயிரிழந்த நிலையில், அவரது உடல் முன்பே திருமணம் நடைபெற்றது. மனிஷ் - காவியா பிரியா ஜோடியின் திருமணத்திற்கு முந்தையநாள் நிச்சயதார்த்தம் நடைபெற்று கொண்டிருந்த போது, மண்டபத்திலேயே மணமகனின் தந்தை வரதராஜ் திடீரென உயிரிழந்தார்.