ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது இரு மகன்கள் மற்றும் மகள் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நாகசுப்பிரமணியன் ஒரு அறையிலும், அவரது மனைவி வேறு ஒரு அறையிலும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.