காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் டார்கெட் வைத்து லாரி உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் மாமுல் வேட்டை நடத்துவதாக எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் லஞ்சம் பெறும் வீடியோ, ஜிபே மூலம் பணம் அனுப்பிய ஆதாரங்களை வைத்திருப்பதாக தெரிவித்த லாரி உரிமையாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.