திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றம் அமைப்பு சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டபட்ட கழிவறை திறப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் சின்னத்திரை நடிகர் பாலா பங்கேற்க இருந்த நிலையில், பள்ளி கல்வி துறை நிகழ்ச்சியை ரத்து செய்தது.