சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி வீட்டின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.மடிப்பாக்கத்தில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் பரங்கிமலை-மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனால் இந்த சாலையில் பகல் வேளையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மேடவாக்கத்தில் இருந்து மடிப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று, சாலையோரம் இருந்த கால்வாயில் இறங்கி அருகில் இருந்த வீட்டின் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.