நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமான 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். செலுக்காடி வனப்பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நேரில் வந்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், மணிகண்டன், மாரிமுத்து, விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது தெரியவந்தது.