திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயி வீட்டில் திருட முயன்று தப்பி ஓடியபோது கிணற்றுக்குள் விழுந்த திருடனை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தழுச்சிகாட்டுப்புதூரை சேர்ந்தவர் விவசாயி சுப்பு குட்டி என்பவரது வீட்டிற்குள் மர்ம ஆசாமி நுழைவதை கண்ட சுப்புகுட்டி கத்தி கூச்சலிட, மர்மஆசாமி பயத்தில் தப்பியோடினான். மறுநாள் காலை சுப்பு குட்டி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சத்தம் வர அவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது அங்கு ஒருவர் இருப்பது தெரியவந்தது. தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்தவரை மீட்டபோது, அவன் திருட வந்தவன் என்பது தெரிந்தது.