வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருடிய இடத்திலேயே மீண்டும் திருட சென்ற திருடன், போலீஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டான். வெங்கடேசபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அங்கு உள்ள வீடு ஒன்றில் ஏற்கனவே ஆறு சவரன் தங்க நகை திருடி சென்ற நிலையில், மீண்டும் அந்த பகுதியில் திருடுவதற்காக நோட்டமிட்டிருந்தது தெரியவந்தது.