மயிலாடுதுறையில் கோவிலை சுற்றி வந்து சாமி கும்பிடுவது போல் நடித்து சாமி சிலையில் இருந்த 1 கிராம் பொட்டை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான பசுபதீஸ்வரர் கோவிலில் திருடு போனது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்ட கூறைநாட்டை சேர்ந்த சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.