செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சொர்ண கணபதி நகைகடையில் உதவியாளராக பணிபுரிந்து வரும் மேனகா என்பவர் வங்கிக்கு மூன்றரை லட்சம் ரூபாயை கொண்டு வந்தார். அதில் 2 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்கு எடுத்து செல்லவே, மீதமிருந்த ஒன்றரை லட்சத்தை ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு சென்றார். அப்போது, நான்கு மர்ம நபர்கள் சீட்டின் லாக்கை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.