தேனி பெரியகுளத்தில் கோவிலுக்குள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயது பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் 70 வயதான முதியவர் பூசாரியாக இருந்து வந்தார்.இவர் கோவில் முன்பாக விளையாடிய சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி ஒருவர் பெற்றோரிடம் கூற ஊர் மக்கள் ஒன்று திரண்டு கோவிலுக்கு சென்றனர்.அப்போது கோவிலை பூட்டிக் கொண்டு பூசாரி உள்ளே ஒளிந்து கொள்ள, அங்கு வந்த போலீசார் கோவிலைத் திறந்து அவரை கைது செய்தனர்.