ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விலங்கியல் ஆசிரியர் வெங்கடேசன் ஆபாசமாக பேசி, பாலியல் உணர்வை தூண்டும் விதமாக விளக்கம் அளித்து பாடம் நடத்துவதாக, தலைமை ஆசிரியரிடம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் புகார் அளித்தனர். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் அளிக்க, ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.