தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை. இவர், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல இவர், வகுப்பில் மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.