திண்டுக்கல் மாவாட்டம் வெள்ளோடு அருகேயுள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையை கண்டிக்கும் விதமாக மாணவர் ஒருவரை உடற்கல்வி ஆசிரியர் சாதியை குறிப்பிட்டு திட்டி கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர் தாக்கியதில் மாணவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.