முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.