விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் உற்சவர் அங்காளம்மன் ஜகத் ஜனனி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்ததை தொடர்ந்து, பூசாரிகள் அம்மனுக்கு பாடல் பாடி தாலாட்டினர். இதில் ஏராளமான பக்தர்கள் கையில் தீபத்தை ஏந்தி வழிபட்டனர்.