விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்துள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள அவரது சிஷ்யர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ராஜபாளையம் DSP பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே சேத்தூர் மற்றும் கோதைநாச்சியாபுரம் கிராமத்தில் மருத்துவர் கணேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள சிஷ்யர்களை வெளியேற்ற வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்ட நிலையில், ராஜபாளையம் DSP நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு தடை விதிக்கக் கோரி அறங்காவலர் சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்த போது, நித்தியானந்தாவுக்கும் மடத்தின் சொத்துகளுக்கும் தொடர்பு இல்லை என கூறி அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.