கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே திறப்பு விழா கண்டும் திறக்கப்படாத அரசு துணை சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.எருமனூர் கிராமத்தில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், இந்த சுகாதார நிலையத்துக்கு இதுவரை மருத்துவர்களோ, செவிலியர்களோ, பணியாட்களோ நியமிக்கப்படாததால் பூட்டியே கிடக்கிறது.