"ப" வடிவில் மாணவர்கள் இருக்கை என்பது சோதனை கட்டத்தில் உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ப வடிவில் மாணவர்கள் அமரவேண்டும் என அரசாணையோ, கட்டாயமோ இல்லை என திட்டவட்டமாக கூறினார்.