கரூர் அருகே பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி நடக்க முடியாத சூழலில் இருப்பதாக தாய் வேதனையுடன் கூறினார். ராஜேஷ் கண்ணா - குளோரா பென்சியா தம்பதியின் மகள் ஸ்ரீநிதி, ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி கட்டடத்தின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.