திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாக்கத்தில் அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓட்டுநர் முகத்தில் குத்தி தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஏறிய ருத்ரேஷ்வரன் என்ற மாணவன், படிக்கட்டில் தொங்கியபடி சென்றதால் ஓட்டுநரும், நடத்துநரும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பேருந்தை நடுவழியில் நிறுத்தி வைத்துவிட்டு போலீசாருக்கு போன் செய்ய முயன்ற ஓட்டுநரின் முகத்திலேயே மாணவர் குத்தியதாக தெரிகிறது. இதில் மாணவர் அணிந்திருந்த மோதிரம் குத்தியதில் ஓட்டுநர் கண்ணின் அருகே காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த ஓட்டுனர் குணசேகரன் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளவேடு போலீசார், சிறுவனை கைது செய்ய முற்பட்டபோது சிறுவன் திடீரென சாலையில் படுத்துக் கொண்டதால், பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனைத் தொடர்ந்து போலீசார், சிறுவன் ருத்ரேஸ்வரனை கைது செய்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையும் பாருங்கள் - ஓட்டுநர் முகத்தில் குத்திய மாணவர்? திடீர் பரபரப்பு | bus driver | student attack