உத்தமபாளையம் அடுத்துள்ள கோம்பை பேரூராட்சியில், மாநில நெடுஞ்சாலையிலும் தெருக்களிலும் ஆறாக மாறி, மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு கோம்பை பகுதியில் நீர் நிலைகள் நிரம்பி தெருக்களில், சாலைகளில் ஆறாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். மழை நீருடன் கழிவு நீரும் கலந்து செல்வதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று, பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.